யாழ்.பருத்தித்துறை சந்தையில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக வெளியான தகவல் அடிப்படையில் நேற்று மோப்ப நாய்கள் சகிதம் பொலிஸார் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
பருத்தித்துறை பொலிஸ் நிலைய தலமைப் பொலிஸ் பரிசோதகர் பியந்த அமரசிங்க தலமையிலான பொலிசாரே இச் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பல பகுதிகளில் போதைப் பொருள் பாவனை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து பருத்தித்துறை சந்தை, பருத்தித்துறை முச்சக்ரவண்டி தரப்பிடம், மந்திகைச் சந்தை, மந்திகையில் வைத்தியசாலை வீதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் இச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை இளைஞர்களின் பொக்கெட் மற்றும் பணப் பை போன்றனவும் பொலிஸாரால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.