யாழில் கட்டிலுக்கு அடியில் இருந்து பிடிபட்ட ஜெனிஸ்டன் தேனுயன்!!

யாழ் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இடம் ஒன்றில் பட்டப்பகலில் மதியம் 1 மணியளவில் வீடு ஒன்றில் கட்டிலுக்கு கீழ் படுத்திருந்துள்ளான் தேனுஜன் என்பவன். வீட்டில் உள்ளவர்கள் இதனை அவதானித்து கத்திய போது வீட்டிலிருந்து வெளியேறி மதில்பாய்ந்து ஓடியதாகத் தெரியவருகி்ன்றது. 

இவன் கட்டிலுக்கு கீழ் படுத்திருந்து வெளியேறிய இடத்தில் வீட்டில் புதிய பைக்கட்டில் இருந்த பேரிச்சம்பழ பெட்டியை எடுத்து அவற்றை அரை குறையாக சாப்பிட்டு வைத்த மீதிப் பேரீச்சைப் பழங்கள் , வீட்டில் சார்ஜ்சில் வைக்கப்பட்டிருந்த “phone power bank” போன்றன காணப்பட்டுள்ளன. இவனை துரத்திப் பிடித்து வட்டுக் கோட்டைப் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர் அந்தப் பகுதி இளைஞர்கள். இவன் திருடச் சென்றானா? அல்லது வேறு ஏதாவது நோக்கத்திற்கு வீட்டின் உள்ளே சென்றானா? என விசாரணைகள் நடைபெற்றுவருகின்றன.

இதே வேளை இவன் மூளாய்ப் பகுதியிலும் களவெடுத்து பிடிபட்டவன் என தெரியவருகின்றது.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad