சுவிஸ் தமிழர்களிடம் 20 கோடி ரூபாக்களுக்கு மேல் சுருட்டிய ஜான்சி நிரோசன்!!

மன்னார் வங்காலை சொந்த இடம் அடம்பனில் வசித்த ஜான்சி நிரோஷன் என்கின்ற தம்பதியினர் சுவிஸ் நாட்டில் 20 கோடி (இலங்கை பெறுமதி) ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

மன்னாரை சேர்ந்த இந்த தம்பதியினர் சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றனர், அங்கே அவர்கள் கடையொன்றினை ஆரம்பித்து எட்டு பேரிடம் இவ்வாறு இருபது கோடி ரூபாய் பணம் பெற்று திருப்பி கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

அங்கே கடையொன்றினை தொடங்கிய இவர்கள் நாங்கள் எங்கள் கடைக்கு பொருட்கள் வாங்கி போடவேணும், இன்னும் பெரிய கடையாக மாற்ற வேண்டுமென கூறி இவர்கள் நெருங்கி பழகி யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவரிடம் வட்டியில்லாமல் எட்டு கோடியும், அதேபோல் ஆறு பேரிடம் குறைந்த வட்டிக்கு பன்னிரண்டு கோடியுமென இவ்வாறு இருபது கோடி பணம் பெற்று மோசடி செய்துள்ளனர்.

இவ்வாறு இருபது கோடி ரூபாய் மோசடி செய்த பின்னர் இவர்களது கடையை வேறொருவருக்கு விற்று விட்டு தற்போது சுவிஸ் நாட்டில் வேறு ஒரு இடத்தில் குடும்பம் நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு தனிப்பட்ட ரீதியில் கடன்கொடுத்தால் சுவிஸ் நாட்டு பொலிஸாரிடம் முறைப்பாடு கொடுக்க முடியாது, எனவே அந்நாட்டு சட்டத்தின் நுணுக்கங்களை பயன்படுத்தி இந்த தம்பதி இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளது.

எனவே இந்த மோசடி தம்பதி தொடர்பில் சுவிஸ் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகள் எச்சரிக்கையாக இருக்குமாறும் கூறப்படுகிறது.

Tags

Top Post Ad

Below Post Ad