யாழில் மூடநம்பிக்கையால் பறிபோனது குழந்தையின் உயிர்.

யாழ். நாவாந்துறை பகுதியில் வயிற்றோட்டம் காரணமாக 8 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தை கடந்த வியாழக்கிழமை வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்தது.

அதனையடுத்து பெற்றோர் குழந்தையை அருகில் உள்ள ஆலயமொன்றுக்கு தூக்கிச் சென்று, பூஜை செய்து, நூல் கட்டியுள்ளனர்.

இருப்பினும், குழந்தைக்கு வயிற்றோட்டம் நிற்காத காரணத்தால், மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை குழந்தையை சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையிலேயே குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

அதனை தொடர்ந்து நேற்று இடம்பெற்ற குழந்தையின் மரண விசாரணையின் பின்னர், வயிற்றோட்டம் காரணமாக அதிகளவு நீரிழப்பு ஏற்பட்டே குழந்தை உயிரிழந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.