அந்த போட்டியில் அப்பாவிப் பெண்கள் பலர் சிக்குண்டு மீடியாக்களில் தங்கள் புகைப்படங்கள் வந்ததால் பெரும் மன அழுத்தத்தில் கதறிக் கொண்டு இருக்கின்றார்கள். இவ்வாறான நிலையில் கலாச்சார உடையில் அழகுராணிப் போட்டி நடாத்தியதாகக் காட்டிக் கொண்டு இந்த ”மூ” தேவிகளுக்கும் முதல் 3 இடங்களை கொடுத்து மகிழ்ந்துள்ளார்களார்களாம் போட்டி நடுவர்கள்.
இந்த நடுவர்கள் யார்? எவ்வாறு இவர்கள் நடுவர்களாக மாறினார்கள்? இந்த நடுவர்களின் மத்தியில் கிளிநொச்சி அரச அதிபரும் இருந்தாரா? என்பதற்கு அப்பால் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு விரக்தி நிலையில் காணப்பட்ட யுவதிகள் பலர் தங்கள் பக்க நியாயங்களை வீடியோவாகவும் ஒலிப்பதிவாகவும் வெளிப்படுத்தியுள்ளதை இங்கு நாம் வெளியிட்டுள்ளோம்.
இந்த அழகு ராணிப் போட்டியில் கலந்து கொண்டவர்களில் பலர் அப்பாவிகள் என்றாலும் சிலர் மொடலிங் என்ற போர்வையில் விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் என சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.