யாழில் கடைக்கு வந்த 10 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 72 வயது தாத்தா நையப்புடைப்பு.

யாழில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 72 வயது முதியவர் பிரதேச இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்டு, பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அந்த பகுதியில் பலசரக்கு கடையொன்றை நடத்தி வரும் முதியவரே கைவரிசை காண்பிக்க முயன்றுள்ளார்.

பொருள் வாங்க வந்த 10 வயது சிறுமியுடனே அத்துமீறியுள்ளார்.

கடையில் யாருமில்லாத சமயத்தில் தனியாக வந்த சிறுமியை, கடைக்குள் தள்ளிச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார். சிறுமி கூக்குரலிட்டுள்ளார்.

அந்த பகுதியால் சென்ற இளைஞர்கள், சிறுமியின் அவலக்குரலை கேட்டு, கடைக்குள் சென்று பார்த்த போது, முதியவர் எக்குத்தப்பான கோலத்தில் நின்றுள்ளார். இதையடுத்து, முதியவரை அடித்து துவைத்த இளைஞர்கள், மானிப்பாய் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.