யாழில் தேவாலயத்திற்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது தாக்குதல்.

சுழிபுரம் - பாண்டவட்டை பகுதியில் இருந்து (31-12-2022) யாழ்ப்பாணத்தில் உள்ள தேவாலயம் ஒன்றிற்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் வைத்து நடாத்தப்பட்டது.

இதன்போது பேருந்தில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் பேருந்தின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதனையடுத்து அவர்கள் அங்கு வந்ததால் அப்பகுதியில் மிகுந்த பதற்றம் நிலவியது.

இந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Top Post Ad

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.