யாழில் போதை பொருளுக்காக பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் 21 -24 வயது பெண்கள்.

யாழ் மாவட்டத்தில் போதைப்பொருளுக்கு அடிமையான சில யுவதிகள், போதைப்பொருளை பெற்றுக்கொள்வதற்காக பாலியல் துர்நடத்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ் மாவட்டத்தில் இவ்வாறான 7 யுவதிகள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் சிலர் போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுவடும் சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த யுவதிகள் அனைவரும் 21- 24 வயதிற்குட்பட்டவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் தவறான காதல் உறவினால் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என தெரிய வந்தது. போதைக்கு அடிமையான பின்னர், போதைப்பொருளை தொடர்ந்து பெற, பலருடன் பாலியல் துர்நடத்தையில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

ஹெரோயின், ஐஸ் போதைப்பொருளுக்கே இவர்கள் அடிமையாகியுள்ளனர்.

இந்த யுவதிகளில் ஒருவரின் பாலியல் தொடர்பின் மூலம் அறிமுகமான நபர் ஒருவர், யுவதியின் அந்தரங்க வீடியோக்கள் பலவற்றை பதிவு செய்து நண்பர்களிற்கு விநியோகித்ததும் தெரிய வந்துள்ளது.

Top Post Ad

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.