யாழில் நடந்த கோர விபத்து. பெண் ஒருவர் படுகாயம்.

யாழ் – கோப்பாயில் மூன்று வாகனங்கள் மோதியதால் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கோப்பாய் கிருஷ்ணன் கோவிலடிச் சந்திப் பகுதியில் குறித்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் உரும்பிராய் – நல்லூர் இராசபாதை இரண்டும் சந்திக்கும் பகுதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப் பகுதி ஆபத்தான சந்தியாக காணப்படுவதால் பல விபத்துச் சம்பங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Top Post Ad

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.