தூக்கில் தொங்கிய நிலையில் கனவன்: மனைவி சந்தேகம்!

மடுல்சீமை பெருந்தோட்ட நிருவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ கேர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்ட 08 ஏ இலக்க தேயிலையில் அமைக்கப்பட்டிருக்கும் அறை ஒன்றில் இருந்து துாக்கில் தொங்கிய நிலையில ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (06) காலை இந்த மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .

குறித்த தேயிலைமலைப்பகுதிக்கு தேயிலை கொழுந்து ஏற்ற சென்ற லொறியின் சாரதி
ஆண் ஒருவரின் சடலம் துாக்கில் தொங்கிய கொண்டிருந்த நிலையில் சடலத்தை
இனங்கண்டு கேர்க்கஸ்வோல்ட் தோட்ட நிர்வாகத்திற்கு அறிவித்ததை அடுத்து
தோட்ட நிர்வாகத்தின் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்ட்டுள்ளது .

நேற்று மாலை முச்சக்கர வண்டியினை செலுத்துவதற்கு சென்ற நபர் இரவு பத்து மணிவரை வீடு திரும்பவில்லையென பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் உறவினர்கலாள் முறைபாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் பொகவந்தலாவ கேர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்டத்தை
சேர்ந்த 34 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான அங்கமுத்து கமலதாசன் என
அடையாளம் கானப்படடுள்ளது.

நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டவர் தனிப்பட்ட பிரச்சினை தொடர்பில் கேர்க்கஸ்வோல் தோட்ட நிர்வாகத்தின் உதவி முகாமையாளரினால் விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சடலமாக மீடகப்பட்ட நபரின் மனைவி தனது கணவரின் மரணத்தில் சந்தேகம்
எழுந்துள்ளதாக பொலிஸாருக்கு தெரிவித்ததை அடுத்து ஹட்டனில் இருந்து
தடயவியல் பொலிஸார் வரவிலைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.

சடலம் மீட்கப்பட்ட இடத்தில் இருந்து முச்சக்கர வண்டி, சடலமாக
மீட்கப்பட்ட நபரின் காட்சட்டை பையில் இருந்து 3140ருபாய் பணம் கையடக்க
தொலைபேசி என்பன மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு மரண விசாரனைகள் திடீர் மரண விசாரணையாளர் தனலெச்சுமி தலைமையில் முன்னெடுக்கப்பட்டதோடு சம்பவம் தொடர்பில் கேர்க்கஸ்வோல்ட் தோட்ட உதவி முகாமையாளர் உட்பட நான்கு பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad