யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களபூமி – பாலாவோடை பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு முன்னால் உள்ள மாமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

48 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் வீடு தூக்கிட்ட வீட்டிற்கு 300 மீற்றர் தொலைவில் இருந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை இரவு குறித்த நபர் இவ்வாறு தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

குறித்த வீட்டில் மூவர் வசித்து வரும் நிலையில் குறித்த நபர் தூக்கிட்டதை அவதானித்த ஏனையோர் அவரை மீட்டபோதும் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் களபூமி பொலிஸ் காவலரண் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad