ரீச்சரின் கள்ளக்காதலனால் வீட்டுக்கு வந்த மாணவி துஷ்பிரயோகம்!!

முல்லைத்தீவு – விசுவமடு பிரதேசத்தில் ஆசிரியை ஒருவரின் கள்ள காதலனால் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் கடந்த (19) புதுக்குடியிருப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை ஆசிரியையின் திருமணமான கணவர் அவரை விட்டுப் பிரிந்து தனி வீட்டில் வசித்து வரும் நிலையில் அந்த ஆசிரியை வேறு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருடன் கள்ள உறவைப் பேணி அவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

குறித்த மாணவி கல்வி விடயம் தொடர்பாக ஆசிரியையின் வீட்டுக்குச் சென்ற போது மாணவி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் போது ஆசிரியை வீட்டில் இருக்கவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மாணவி பெற்றோரிடம் கூறியதையடுத்து அவர்கள் பொலிஸில் முறைப்பாடு அளித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை (20) அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவாரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad