பொது இடத்தில் பெண்களுக்கு முத்தம் கொடுத்துவிட்டு தப்பி ஓடும் இளைஞர்


பீகாரில் மருத்துவமனை வளாகத்திற்குள் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த பெண்ணை இளைஞர் ஒருவர் வலுக்கட்டாயமாக முத்தமிட்டுத் தப்பி ஓடிவிட்டார்.

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள சதார் மருத்துவமனை வளாகத்தில் மார்ச் 10ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பெண் மருத்துவமனையில் தசுகாதாரப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக முத்தமிடப்பட்ட காட்சி பதிவாகியுள்ளது.

அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இதனால் அந்தப் பெண் ஜமுய் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

2015ஆம் ஆண்டு முதல் அந்த மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளராகப் பணிபுரிந்துவருகிறார். குற்றம் சாட்டப்படும் நபரை தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறுகிறார். "முன்பின் தெரியாத ஒருவர் எனக்குப் பின்னால் வந்து என் வாயில் அழுத்தி முத்தமிட்டார். நான் அவரிடமிருந்து விலகிச் செல்ல முயற்சி செய்தேன். அவர் ஏன் வந்தார், என்ன செய்ய விரும்பினார் என்பதை என்னால் சொல்ல முடியவில்லை. அவர் யார் என்றே எனக்குத் தெரியாது" என அந்தப் பெண் தெரிவிக்கிறார்.

மேலும், அந்தப் பெண் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனை ஊழியர்களை அழைத்தாவும் ஆனால், அதற்குள் முத்தமிட்ட நபர் வெளியேறிவிட்டதாகவும் அந்தப் பெண் சொல்கிறார். "மருத்துவமனை வளாகத்தின் சுற்றுச்சுவர் மிகவும் குட்டையாக உள்ளது. அதற்கு மேல் வேலி அமைத்துக் கொடுத்தால் மருத்துவமனைக்கு அடிக்கடி வரும் பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்" எனவும் வேண்டுகோள் விடுகிறார்.

இதனிடையே, செய்தி நிறுவனம் ஒன்று அளிக்கும் தகவலின்படி, குற்றம்சாட்டப்படும் இளைஞர் அதே மாவட்டத்திலேயே அடிக்கடி இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார் என்று சொல்லப்படுகிறது. இதேபோல பல பெண்களை வலுக்கட்டாயமாக முத்தமிட்டுள்ளார் என்றும் பெண்களை முத்தமிட்ட சிறிது நேரத்தில் அந்த இடத்தை விட்டு ஓடிவிடுகிறார் என்றும் கூறப்படுகிறது.

பெண்களின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் இந்த அத்துமீறலைச் செய்துவரும் இளைஞரைப் ஜமுய் மாவட்ட காவல்துறையினர் தேடி வருகின்றனர். அவர்மீது ஏற்கெனவே பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad