இந்தியா வடமானிலத்தில் உள்ள சத்தீஷ்கர், ஷமாரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமேந்திர மேராவி (22). இவருக்கு 2 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
காதலியின் திருமணத்தில் முன்னாள் காதலன் வழங்கிய பரிசால் மாப்பிள்ளை உயிரிழப்பு! | Groom Dies Due To Ex Boyfriend S Gift
திருமணத்திற்கு வந்தவர்கள் பல பரிசு பொருட்கல்ளை குடுத்துச்சென்றுள்ளனர். அதனை, ஹேமேந்திர மேராவியும் அவரது சகோதரரான ராஜ்குமார் என்பவரும் பிரித்து பார்த்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது, ஹோம் தியேட்டர் ஒன்றும் திருமண கிஃப்ட் ஆக வந்திருந்தது. ஆவலுடன் ஹோம் தியேட்டரை பிரித்து பார்த்தபோது அது வெடித்து சிதறி வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் புது மாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.
காதலியின் திருமணத்தில் முன்னாள் காதலன் வழங்கிய பரிசால் மாப்பிள்ளை உயிரிழப்பு! | Groom Dies Due To Ex Boyfriend S Gift
சம்பவத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சகோதரரும் உயிரிழந்ததுடன் வீட்டில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வழக்குபதிவு செய்து பொலிஸார் விசாரித்ததில், ஹோம் தியேட்டரை பரிசளித்தது மணப்பெண்ணின் முன்னாள் காதலன் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் மணப்பெண்ணின் முன்னாள் காதலனான சர்ஜூ என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் காதலியின் திருமண பரிசில் முன்னாள் காதலன் கணவனுக்கு வேட்டுவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.