போலி வட்ஸ்அப் கணக்குகள் மூலம் பெண்களின் நிர்வாண படங்களை பெற்ற இளைஞன் கைது.

இலங்கையில் உள்ள இரண்டு பிரபல மொடல் அழகிகளின் பெயர்களில் இரண்டு போலியான வட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி, பாடசாலை மாணவிகள், இளம் யுவதிகளுக்கு வலைவிரித்து, அவர்களின் நிர்வாணப் புகைப்படங்களை பெற்ற 19 வயதான பாடசாலை மாணவனை குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

மினுவாங்கொட. பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்தது.

மினுவாங்கொடையில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இம்மாணவி, தகவல் தொழில்நுட்ப கற்கை நெறியில் இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளார்.

இந்த மாணவனின் கணினியில் பாடசாலை மாணவிகள் மற்றும் இளம் பெண்கள் 12 பேரின் நிர்வாண புகைப்படங்களை கணினி குற்றப்பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பல யுவதிகளின் அரைநிர்வாண புகைப்படங்கள் அவரது கணினியில் இருந்ததை கண்டறிந்து, அனைத்தையும் நீக்கிவிட்டனர்.

இந்த மாணவன் இலங்கையின் இரண்டு முன்னணி மொடல் அழகிகளின் பெயரில் உருவாக்கப்பட்ட இரண்டு போலி வட்ஸ்அப் கணக்குகள் மூலம் தனக்குத் தெரிந்த பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகளின் வட்ஸ்அப் எண்களை சேகரித்து வட்ஸ்அப் குழுவை உருவாக்கியுள்ளார்.

இந்த வட்ஸ்அப் குழுக்களில் புதிய மொடல்கள் தேவை, கவர்ச்சியான சம்பளம் வழங்கப்படும் என்ற விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மொடலிங் செய்வதில் ஆர்வமுள்ள பல யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவிகள், இந்த வட்ஸ்அப் குரூப் இரண்டு பிரபல மொடல் அழகிகளுக்கு சொந்தமானது என்று நம்பி விண்ணப்பித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாடசாலையின் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவரான இம் மாணவன், புகைப்பட கலைஞராகவும் பணியாற்றி வருகிறார்.கணினி குற்றப்பிரிவு, மடிக்கணினியில் இருந்த புகைப்படங்களுக்குரிய மாணவிகள் மற்றும் இளம் பெண்களிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுத்து வருகிறது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad