யாழில் கடன் பிரச்சினையால் உயிரிழந்த குடும்பஸ்தர்!!

 யாழ்ப்பாணத்தில் கடன் பிரச்சினையால் நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ் நகரப் பகுதியில் நகைப் பட்டறையில் பணியாற்றும் 40 வயதான குடும்பஸ்தர் ஒருவரே மட்டுவிலில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார்.பொட்டாசியம் அருந்தி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.கடன் பிரச்சினை காரணமாக அவர் இவ்வாறானதொரு தவறான முடிவு எடுத்துள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad