யாழில். நண்பன் என கூறி வாள் வெட்டு தாக்குதல் முயற்சி.

நண்பன் போன்று, இளைஞனுக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்து , வாள் வெட்டு தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கோண்டாவில் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு நேற்றைய தினம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மற்றுமொரு இளைஞன் ஒருவர் , தன்னை நண்பனாக அறிமுகம் செய்து கொண்டு கீரிமலை பகுதிக்கு சந்திக்க வருமாறு கோரியுள்ளார்.

அதனை அடுத்து அப்பகுதிக்கு இளைஞன் சென்ற போது , அங்கு நின்ற கும்பல் ஒன்று இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளது.

அவ்வேளை இளைஞன் சுதாகரித்து தாக்குதலில் இருந்து, மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவத்தை அவதானித்த ஊரவர்கள் ஒன்று கூடியதில், தாக்குதலாளிகள் இளைஞனின் மோட்டார் சைக்கிளை எடுத்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் இளைஞன் முறைப்பாடு செய்ததை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad