நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் 14 மாதங்கள் நிரம்பிய சாவகச்சேரி – இத்தியடி பகுதியை சேர்ந்த ரகுராம் சாந்திரா என்ற குழந்தை உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தை இரண்டு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் குழந்தை நேற்றைய தினம் காலை 8 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று பி.ப 1 மணியளவில் குழந்தை உயிரிழந்தது.