யாழில் வாய் பேச முடியாத பெண்ணிடம் 21 பவுண் மோசடி.

வாய் பேச முடியாத பெண்ணிடம் 21 பவுண் தாலிக்கொடியை இரவலாக வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் வாய் பேச முடியாத பெண்ணொருவரிடம் , அயலவரான யுவதி ஒருவர் கொண்டாட்டங்களுக்கு செல்லும் போது , தாலிக்கொடியை இரவலாக பெற்று அணிந்து சென்ற பின்னர் அதனை மீள அப்பெண்ணிடம் கையளிப்பதனை வழமையாக கொண்டு இருந்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் வழமை போன்று , தாலிக்கொடியை இரவலாக வாங்கி சென்ற யுவதி , தாலிக்கொடியை திருப்பி கொடுத்த போது , கொடியின் அமைப்பில் வித்தியாசத்தை உணர்ந்த தாலிக்கொடியை இரவல் கொடுத்த பெண் , அதனை நகைக்கடை ஒன்றில் சோதித்த போது , அது போலியானது (கவரிங்) என தெரியவந்துள்ளது.


அதனை அடுத்து குறித்த பெண் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து , அயலவரான யுவதியை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது , சுன்னாகம் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் இரவலாக பெற்ற தாலிக்கொடியை விற்று விட்டு , அதே போன்று போலி தாலிக்கொடியை (கவரிங்) செய்து , அதனை அப்பெண்ணிடம் கொடுத்தமை தெரிய வந்துள்ளது.

குறித்த யுவதியை பொலிஸார் தடுப்பு காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad