பேருந்துகளில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 42 பேர் கைது.

பொது போக்குவரத்த்தின்போது பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளை பாலியல் சீண்டலில்,ஈடுபட்ட 42 பேர் நேற்று (7) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 5 பேர் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் என்றும் , 18 பேர் பாலியல் துஷ்பிரயோக குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

42 பேர் கைது
பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் பெண்கள் மற்றும் சிறு பிள்ளைகளுக்கு எதிரான பல்வேறு பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களுக்கு நாளாந்தம் பதிவாகும் முறைப்பாடுகளை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் முதல் நாளிலேயே 42 சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.

இந்நிலையில் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்தும் போது, சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுக்களாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad