சலூனுக்குள் வைத்து 14 வயது சிறுமியை... 70 வயது தாத்தா உட்பட 13 பேர்.

அநுராதபுரத்திலுள்ள சலூனில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சலூன் உரிமையாளரையும் மற்றுமொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று (18) அனுராதபுரம் பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி நாலக சஞ்சீவ ஜயசூரிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, ​​பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.

சம்பந்தப்பட்ட சலூனுக்கு பின்னால் உள்ள அறையில் இந்த குற்றம் நடந்துள்ளதுடன், சந்தேகநபர்கள் இருவரைத் தவிர, 11 சந்தேக நபர்களின் பெயர்களை சிறுமி பொலிஸாரிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

சந்தேக நபர்களில் 70 வயதுடைய முதியவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்கள் 11 பேரையும் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தரம் 09 இல் கல்வி கற்கும் இந்த பாதிக்கப்பட்ட சிறுமி தேசிய மட்டத்தில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மிகவும் திறமையான சிறுமி எனத் தகவல் வெளியாகியுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad