வட மாகாண சபைக்கு புதிய பிரதம செயலாளர்.

வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக எல்.இளங்கோவன் இன்று தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணம் – கைதடியில், வடக்கு மாகாண சபையில் உள்ள தமது அலுவலகத்தில் இன்று காலை குறித்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வின் நிகழ்வில் வடக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாண அமைச்சுகளின் உத்தியோகத்தர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதம செயலாளர் செயலக உத்தியோகத்தர்கள், மதகுருமார்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எல்.இளங்கோவன் வடக்கு மாகாண அமைச்சுக்கள் பலவற்றின் செயலாளர் பதவி வகித்ததுடன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

பின்னர் வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமனம் பெறும் வரை, வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளராக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad