பிரான்ஸ் செல்லவுள்ளோருக்கான முக்கிய தகவல்.

ஆபத்தான பயணங்கள் மூலம் பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதை தவிர்க்குமாறு அந்நாட்டு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் இவ்வாறான சட்டவிரோதமான முறையில் செல்ல முயற்சிப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணத்தினால் மக்களிடையே உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

ஆபத்தான பயணங்கள்
வெளிநாட்டவர்கள் பயணிப்பதற்கு பயன்படுத்தப்படும் படகுகள் நீண்ட தூரம் செல்வதற்கு திறனற்ற தன்மையுடையனவாக காணப்படுகின்றது.

இந்நிலையில் கடந்தாண்டில் 12 சட்டவிரோத குடியேற்றவாசிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில் இந்த ஆண்டு ஏற்கனவே ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

ஆகவே இவ்வாறான ஆபத்தான பயணங்களை தவிர்க்குமாறு பிரான்ஸ் காவல்துறையினர் வெளிநாட்டவர்களை எச்சரித்துள்ளனர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad