யாழில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்


யாழ்ப்பாணம் நவக்கிரி பகுதியில் வீடொன்றின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலானது நேற்று(15.03.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை பெட்ரோல் குண்டு வீசி தீயிட்டு எரித்ததுடன் வீட்டின் ஜன்னல்கள், கதவுகள் என்பவற்றையும் கூரிய ஆயுதங்களால் உடைத்து சேதமாக்கியுள்ளனர்.

பொலிஸ் விசாரணை
வீட்டில் உள்ளவர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளை கூரிய ஆயுதங்களுடன் வந்த மூவர் தமது வீட்டை உடைத்து மோட்டார் சைக்கிளையும் தீயிட்டு எரித்ததாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad