தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்கள். தடுப்பது எப்படி?

தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. தொடர்ந்து வறண்ட வெப்பநிலை நிலவுவதால் இந்த பூச்சியின் தாக்குதல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை தொழில்நுட்ப முறைகளை கடைபிடித்து வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம்.

வயதில் முதிர்ந்த பெண் வெள்ளை ஈக்கள், மஞ்சள் நிறமுள்ள நீள்வட்ட முட்டைகளை சுழல் வடிவ அமைப்புகளில் ஓலைகளின் அடிப்பகுதியில் இடும். மெழுகுப் பூச்சுடன் காணப்படும் முட்டைகளிலிருந்து வெளிப்படும் இளம் குஞ்சுகள் மற்றும் முதிர்ந்த ஈக்கள் ஓலைகளின் அடிப்பரப்பில் இருந்து சாற்றை உறிஞ்சும்.

இவை வெளியேற்றும் தேன் போன்ற திரவம் கீழ்மட்ட ஓலைகளிலிருந்து படியும். அதன்மேல், கேப்னோடியம் என்ற கரும்பூசணம் படர்கிறது. இதனால், ஒளிச்சேர்க்கை தடைபடுகிறது. இப்பூச்சிகள் தென்னை மட்டுமில்லாமல், வாழை, பாக்கு, சப்போட்டா ஆகிய பயிர்களையும் தாக்குகின்றன.

இதுபோன்ற அறிகுறிகளைக் கண்டவுடன், மஞ்சள் நிறமுடைய பாலீத்தீன் தாள்களில் ஆமணக்கு எண்ணெய் தடவிய ஒட்டும் பொறிகளை 5 அடிக்கு ஒன்றரை அடி என்ற அளவில் ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில், 6 அடி உயரத்தில் தொங்கவிட்டு வெள்ளை ஈக்களை கவர்ந்தழிக்கலாம்.

விளக்குப் பொறிகள் ஏக்கருக்கு 2 வீதம் 6 முதல் 11 மணி வரையிலும் ஒளிரசெய்ய வேண்டும். இதற்கான சிகிச்சை முறைகளாக நீர்ப்பாசனம் விசுறுதல், வேப்பெண்ணெய்க் கரைசல் மற்றும் சவர்க்காரத்தூள் கரைசலை கலந்து தென்னைகளுக்கு முற்று முழுதாக விசுறுதல், அக்டா என்ற இரசாயனப் பொருளை 15 நாள்களுக்கு ஒரு தடவை விசுறுதல், அங்கீகரிக்கப்பட்ட கிருமி நாசினிகள் விசிறல், கோதுமை மா மற்றும் அரிசி மா ஆகியவற்றை சேர்த்து ஒரு கிலோ மாவுக்கு 20 லீற்றர் தண்ணீரைக் கலந்து விசுறுதல் போன்றன காணப்படுகின்றன.

மற்றவர்களும் அறிந்து கொள்ள முடிந்தால் இப்பதிவினை பகிர்ந்து கொள்ளுங்கள். 
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad