எரிபொருள் நிலையத்தில் காரில் வந்து காவாலிகள் செய்த காவாலித்தனம்.

 முல்லைத்தீவில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் மீது காரில் வந்த நபர்களால் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் நேற்றையதினம்(25) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் நேற்றையதினம்(25) மாலை கார் ஒன்றில் சென்ற நால்வர் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள் .

இந்நிலையில், தாக்குதலை தடுக்கச் சென்ற பொதுநபர் ஒருவர் மீதும் குறித்த குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்ககள் மீது தாக்குதல் நடத்தி அச்சுறுத்தலாக அமைந்தது மாத்திரமல்லாமல் எரிபொருள் இறக்குவதற்காக எரிபொருள் தாங்கி திறந்திருந்த நிலையில், இவர்களின் இவ்வாறான செயற்பாடு பாரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, இவ்வாறான செயற்ப்பாடுகளை உடன் கட்டுப்படுத்த வேண்டும் எனவும், இல்லையேல் இது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்

இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் , குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad