கர்ப்பிணி பெண்கள் கடத்திய ஹெரோயின். மூவர் கைது.

பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய, இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட மூன்று பெண்கள் அநுராதபுரம் தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தம்புத்தேகம,குடாகம மற்றும் புலத்சிங்கள ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 20, 23 மற்றும் 30 வயதுடையவர்களாவர்.

கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் தனது கழுத்தில் அணிந்திருந்த நகை திருடப்பட்டுள்ளதாக தெரிவித்த நிலையில், பஸ்ஸின் சாரதி அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு பஸ்ஸுடன் சென்றுள்ளார். .

இதன்போது, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து 1 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் , 2 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணம் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad