யாழில் பிரபல துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் சண்முகலிங்கம் மரணம்.

யாழ்பல்கலைகழகத்தில் உடற்கல்வி டிப்ளோமா கற்கைநெறி ஆரம்பித்தபோது துடுப்பாட்டத்திற்க்கு பயிற்றுநராகவும் விரிவுரையாளராக செயல்ப்பட்டு வந்த சண்முகலிங்கம் காலமாகியுள்ளார்.

இவர் பல நூற்றுக் கணக்கானவர்களை உருவாக்கிய உயிரிலும் மேலாக துடுப்பாட்டத்தை நேசித்த உன்னதமான உயர்ந்த பண்புகளை கொண்ட ஒழுக்கத்தில் அழுக்கற்ற ஒப்புரவாக்குவதில் ஒய்வற்ற அன்பாலே அரவனைத்து அன்பாலே கண்டிக்கும் ஆளுமைமிக்க ஆற்றலின் சிகரம் ஆடிய களங்களும் ஆட்டுவித்த களங்களும் எண்ணில் அடங்காதவை.

துயரச்செய்தி கேட்டு துன்பப்பட்டாலும் சண்முகலிங்கம் என்று அழைக்கப்பட்ட சண் ஆசான் விதைத்தவை விருட்சமாகி விழுதுபரப்பி உள்ளன ஆசானின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிநிற்கிறோம் என சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுகின்றது.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad