கனடாவில் 54 வயது கீர்த்தனா வுடன் தொடர்பில் இருந்த 43 வயது சுகுமார் கைது.

கனடா ரொறொன்ரோவில் யாழ் தென்மராட்சிப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட 54 வயதான விவாகரத்தான கீர்த்தனாவுடன் அந்தரங்கத் தொடர்பைப் பேணிய 43 வயதான சுகுமார் என்பவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சொந்த இடமாகக் கொண்ட சுகுமார் தனது மனைவியை தாக்கிக் காயப்படுத்தியமைக்காகவே கைது செய்யப்பட்டதாகத் தெரியவருகின்றது. கீர்த்தனாவுடன் அந்தரங்கத் தொடர்பைப் பேணி வந்த 3 பிள்ளைகளுக்கு தந்தையான சுகுமாரை மனைவி பல தடவைகள் கண்டித்துள்ளார்.

ரொறொன்ரோவில் உள்ள சிலரால் யாழ்ப்பாணத்தில் உள்ள ஊர் ஒன்றின் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட வட்சப் குறுாப் ஒன்றின் ஊடாக பல தடவைகள் ஒன்று கூடல் நடந்துள்ளது. அந்த ஒன்று கூடலின் போதே கீர்த்தனாவின் தொடர்பு சுகுமாருக்கு கிடைத்துள்ளது. இதனை மோப்பம் பிடித்து அறிந்த சுகுமாரின் மனைவி, பல தடவைகள் சுகுமாருடன் சண்டையிட்டுள்ளார். இந் நிலையில் கடந்த சில நாட்களுக்குப் முன் சுகுமார் மனைவி மீது நடத்திய தாக்குதலில் மனைவிக்கு தலையில் கண்டல் காயம் ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் கண்டல் காயத்தால் தொடர்ச்சியான உபாதைகளுக்கு உள்ளான மனைவி வைத்தியசாலைக்கு சென்ற போது நடத்தப்பட்ட விசாரணையின் போதே கணவரால் தாக்கப்பட்ட சம்பவம் வெளிவந்துள்ளது. சுகுமார் தற்போது பொலிசாரால் கைது செய்யபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கனடாவில் செயற்படும் சில தமிழ் அமைப்புக்கள் வட்சப் குறுாப்கள் சிலவற்றில் கனடாவில் உள்ள ஈழத்தமிழர்களை அங்கத்தவர்களைச் சேர்த்து பல்வேறுபட்ட துஸ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.


கடந்த ஆண்டு ”சிங்கிள் மதர்ஸ்” என அழைக்கப்படும் விவாகரத்தான, கணவனை விட்டு பிரிந்த பெண்களையும், புலம்பெயர் தமிழர்களையும் அங்கத்தவர்களாகக் கொண்ட வட்சப் குழு ஒன்றினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஆண்டு இறுதி கொண்டாட்டத்தின் போது பல புலம்பெயர் தமிழ்ப் பெண்கள் நிறை போதையில் தங்களை மறந்து ஆபாச நடனமாடியதுடன் பலர் அங்கு நின்ற ஆண்களுடன் தனித் தனி அறைகளில் தங்கியதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த வட்சப் குறுாப்பிற்கு ரொறோன்ரோவில் றியல்எஸ்டேட் தொழில் மேற்கொள்ளும் பெண் ஒருவரே அட்மினாக இருப்பதாகவும் தெரியவருகின்றது. இவை தொடர்பான முழுமையான தகவல்களை விரைவில் நாம் வழங்குவோம்.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad