தினம் ஒரு கொள்ளை சம்பவம் இடம்பெறுகின்றது. பல கோடி பெறுமதியான நகைகள் திருட்டுக் கும்பல்களால் பட்டப்பகலில் திருடப்படுகின்றன.
நேற்றய தினம் (26) மிடில்ஃபீல்ட் மற்றும் பிஞ்ச், ஸ்கார்பரோவில் உள்ள வர்த்தக கட்டடத்தில் உள்ள நகை கடை ஒன்றில் திருட்டு கும்பல் திருட முற்பட்ட போது அங்கிருந்த தமிழ்மக்களால் இருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.
இவ்வாறு பிடிக்கப்பட்டவர்கள் சிறுவர்கள் என அறியமுடிகிறது. அவர்களை பொலிஸாரிடம் அங்கிருந்தவர்கள் கையளித்துள்ளனர். அவர்களை கைது செய்த பொலிசார் வெளியில் அழைத்துச் சென்று அவர்களை விடுவித்துள்ளனர்.