யாழ். மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதான ஆரம்பக்கட்ட புனரமைப்பு பணிகள் கடந்த சனிக்கிழமை (20) முன்னெடுக்கப்பட்டபோது துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டன .
ஊர் காவல்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவுப் பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதான ஆரம்பக் கட்ட பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
மண்டைதீவு கிரிக்கெட் மைதானத்தில் வெளிவந்த தோட்டாக்கள் | Bullets Found At Mandaitivu Cricket Ground
இந்நிலையில், T56 ரக துப்பாக்கி ரவைகள் பல கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடர்பான தகவல்கள் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு வழங்கப்பட்டது.
ரவைகளை மீட்டெடுப்பதற்கான அனுமதியை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) கோரியதற்கு இணங்க ஊர்காவற்றுறை நீதிமன்ற உத்தரவிற்கமைய ரவைகள் மீட்கப்பட்டன சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர் காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.