யாழ் அல்லைப்பிட்டியில் பஸ் மோதி பிரேமதாசன் பலியான காட்சி!!

 யாழில் பேருந்து மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் இன்றைய தினம் (16) உயிரிழந்துள்ளார். 3 ஆம் வட்டாரம், அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்த கண்ணதாசன் பிரேமதாசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், இன்றையதினம் இவர் உந்துருளியில் யாழ்ப்பாணத்தில் இருந்து அல்லைப்பிட்டி நோக்கி சென்றுகொண்டிருந்தார். இதன்போது பின்னால் வந்த பேருந்து மண்டைதீவு சந்திக்கு அருகாமையில் அவர்மீது மோதியது.

இதன்போது அவர் அதிலேயே மயக்கமுற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad