இலங்கையில் ஆண்கள் மத்தியில் அதிகரிக்கும் எச்.ஐ.வி தொற்று.

 தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இலங்கையில் ஆண்களை  மட்டும்  மையமாகக் கொண்ட எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2025 ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் வரையான காலப்பகுதியில் மட்டும் 200 புதிய எச்.ஐ.வி தொற்றுகள் பதிவாகியுள்ளன. முதல் காலாண்டில் 230 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு இதுவரை, எச்.ஐ.வி தொற்று காரணமாக 23 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில், 47 பேர் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் நாடு முழுவதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான எச்.ஐ.வி பரிசோதனைகள் நடத்தப்பட்டன. 

இந்த போக்கு அதிகரித்து வருவதனால் தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் தடுப்பு வேலைத்திட்டம், ஆணுறைகளின் பயன்பாடு, முன்னெச்சரிக்கை மருந்துகள், சம்பவத்திற்குப் பின்னரான தடுப்பு மருந்துகள் உள்ளிட்ட எச்.ஐ.வி தடுப்பு கல்வியைப் பாடசாலை பாடத்திட்டங்களில் இணைக்க முன்மொழிந்துள்ளது. 

 இந்த முன்மொழிவு இன்னும் ஆய்விற்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad