ஆண்களே குழந்தை வேணும்னா, இந்த 4 விஷயத்துல தவறியும் தப்பு பண்ணிடாதீங்க..!

குழந்தை பெற்றுக்கொள்ள தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட்டால் மட்டும் போதாது. விந்தணு திறன், கரு திறன், சரியான நாள் என பல விஷயங்கள் சரியாக அமைந்தால் தான் கருத்தரிக்கும் வாய்ப்புகள் கூடும்.

முக்கியமாக கருவளம் ஆண், பெண் மத்தியில் சரியாக இருந்தால் மட்டுமே குழந்தை செல்வம் சாத்தியம். மாற்றமடைந்த வாழ்வியல், மற்றும் உணவுப் பழக்கத்தால், பலரும் இன்று இளம் வயதிலேயே ஆரோக்கியம் குன்றி தான் காணப்படுகின்றனர். எனவே, குழந்தைப் பெற்றுக் கொள்ள விரும்பும் ஆண்கள், இந்த நான்கு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்…

ஊட்டச்சத்துக்கள்: உங்கள் டயட்டில் ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் குறைவாக இருந்தால், கருத்தரிப்பு ஏற்படுவது சிரமாகும். இது, ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும். எனவே, குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் ஆண்கள் மல்டிவைட்டமின் மற்றும் ஃபோலிக் அமிலம் சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். இது, பிறக்கப் போகும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கும்.

உணவுகள்: கீரை, பச்சைக காய்கறிகள், ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழச்சாறு, பீன்ஸ், தானியங்கள், போன்ற உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்வது, ஆரோக்கியமான குழந்தைப் பெற தேவையான உடற்சக்தியை அளிக்கும்.

உடற்பயிற்சிகள்: ஜிம்மிற்கு தான் செல்ல வேண்டும் என்றில்லை, தினமும் நீங்கள் உட்கொள்ளும் உணவு / கலோரிகளின் அளவிற்கு, ஏதேனும் உடல் உழைப்பு அல்லது எளிய பயிற்சிகளில் ஈடுபட வேண்டியது அவசியம். அதே போல, சீரான உறக்கமும் அவசியம். கண்ட நேரத்தில் உறங்குவது, கண்ட நேரத்தில் வேலை செய்வது உங்கள் உடலில் முக்கியமான ஹார்மோன்களை பாதிப்படைய வைக்கும்.

போதை: புகை, மது, போதை பொருட்கள் உட்கொள்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். இது, விந்தணு திறன் மற்றும் உற்பத்தியை பாதிக்கக் கூடியது. ஆனால், ஆண், பெண் இருவரும் ஒயின் பருகுவது நல்லது எனப்படுகிறது. அவ்வப்போது சிறிதளவு ஒயின் எடுத்துக் கொள்வது சிறந்த பயனளிக்கிறது.

பரிசோதனை: ஒருவேளை உங்களால் இல்லறத்தில் சிறந்து செயல்பட முடியவில்லை என்ற உணர்வு எழுவது போன்று இருந்தால், எதற்கும் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது. சின்ன, சின்ன வேறு உடல்நலக் கோளாறுகளாலும் கூட தாம்பத்திய வாழ்வில் சிறந்து செயல்பட முடியாமல் போகலாம்.

சிலர் சங்கோஜம் எனும் பெயரில் தாமதம் படுத்துவது தான் பின்னாட்களில் பெரும் விளைவுகளை சந்திக்க நிர்பந்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே, எதுவாக இருப்பினும், மருத்துவரை கண்டு பரிசோதனை எடுத்துக் கொள்வது சிறந்தது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad