பெண்கள் சொல்லுற இதெல்லாம் பொய் – நம்பாதீங்க..!

பொய் இல்லாத உறவுகள் இல்லவே இல்லை. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, திட்டு வாங்காமல் இருக்க, தன்னை நல்லவனாக காட்டிக் கொள்ள, உறவில் பிரிவு ஏற்படாமல் இருக்க என பல இடங்களில் நாம் பொய்கள் கூறி வருகிறோம். இவை எல்லாம் தவிர்க்க முடியாதவை.
ஆனால், சில பொய்களை உங்கள் வாழ்க்கையில் உங்கள் துணையிடம் இருந்து தினம், தினம் உண்மை என எண்ணி நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என உங்களுக்கு தெரியுமா? ஆம், தாம்பத்தியத்தில் துவங்கி, அன்றாடம் கூறும் ஐ லவ் யூ வரை இது நீள்கிறது.
பொய் # 1 
அந்தரங்க வாழ்க்கை! நான் நமது அந்தரங்க வாழ்க்கையை பற்றி யாரிடமும் கூறியதில்லை, கூறவும் மாட்டேன் என உங்கள் துணை கூறலாம். ஆனால், பெண்கள் மத்தியில் தோழிகளுடன் அவரவர் அந்தரங்க வாழ்கையை பற்றி பரிமாறிக் கொள்ளும் பழக்கம் இருக்கிறது.
பொய் # 2 
எந்த பிரச்னையும் இல்லை! உங்கள் துணை எப்போதாவது உங்களிடம் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை, நான் நல்லதா இருக்கேன் என்று கூறினால். அவர் சமீப காலமாக ஏதோ பிரச்சனை அல்லது, நீங்கள் செய்யும் செயல் ஏதோ அவருக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தம்.
பொய் # 3 
உங்களது தோற்றம்! உங்கள் தோற்றத்தை பற்றி எந்த கவலையும் இல்லை, என உங்கள் துணை கூறிகிறார் எனில், நீங்கள் கன்றாவியாய் உடை உடுத்தி இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
பொய் # 4 
உங்கள் நண்பர்கள்! நீங்கள் நண்பர்களுடன் வெளியே செல்வது, அவர்களுடன் அதிகமாக பழகுவது குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை, என அவர்கள் கூறும் தொணியிலேயே அவர்கள் பொய் தான் கூறிகிறார் என நீங்கள் அறிந்துக் கொள்ளலாம்.
பொய் # 5 
பணம்! பணம் எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. உண்மை தான் அவரது தோழி / உறவுக்கார பெண்ணின் கணவரை விட நீங்கள் அதிகமாக சம்பாதிக்கும் வரை. இல்லையென்றால் ஊதிய உயர்வை பற்றி அடிக்கடி பேச்சுக்கள் அடிப்படும்.
பொய் # 6 
காலிங்! நீங்கள், “முக்கியமான மீட்டிங் அல்லது அவசர வேலை, இன்னிக்கி கால் செய்யாதே” எனும் போது, “நான் எதுக்கு உங்களுக்கு கால் செய்ய போறேன், பண்ண மாட்டேன் போங்க!” என்று கூறுவார்கள். ஆனால், அன்று தான் எக்கச்சக்கமான கால்கள் வரும்.
பொய் # 7 
கம்பேரிஷன்! ஒப்பிட்டு பேசாமல் பெண்களால் இருக்க முடியாது. குறைந்தபட்சம், ஒப்பிட்டு பார்த்துக் கொண்டாவது இருப்பார்கள். இது, ஊதியம், உறவும், சந்தோஷம் என அனைத்திலும் அடங்கும்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad