உங்க வீட்டுக்குள்ளும் பேய் இருக்கிறதா? இத கொஞ்சம் படியுங்களன் தெரியும்

பேய் உள்ளதா இல்லையா என்பது இன்றளவும் வாக்குவாதமாக உள்ளது. ஆனால் தங்களைச் சுற்றி வழக்கத்திற்கு மாறான சம்வங்கள் நடப்பதை பலரும் உணர்ந்திருப்பார்கள். இத்தகைய சம்பவங்களுக்கு தர்க்க ரீதியான விளக்கங்கள் ஏதும் இருக்காது. பேய் பிசாசு இருக்கிறது என்பதற்கான கதைகளும், கட்டுக்கதைகளும் இருக்கவே செய்கிறது. ஒரு வீட்டை தங்களின் இருப்பிடமாக அவைகள் மாற்றினால் அது பேய் உலாத்தும் வீடாக மாறி விடுகிறது.

தூங்கும் போது ஆளை அமுக்கும் ‘அமுக்குவான் பேய்’ பற்றி தெரியுமா?
பேய் உலாவும் வீடுகள் பற்றிய கதைகளையும், திரைப்படங்களையும் நாம் நிறையவே பார்த்திருப்போம். ஆனால் இத்தகைய அனுபவங்களை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பெற்றால் எப்படி இருக்கும்? கண்டிப்பாக பயமாக தானே இருக்கும்? ஒரு வீட்டில் பேய் உலாவும் உணர்வைப் பெற சில குறிப்பிட்ட விஷயங்கள் உள்ளது. அவைகளைப் பற்றி உங்களுக்கு தெரியும் என்றால் நீங்கள் சரியான முடிவுகளை எடுத்து, ஒன்று அந்த வீட்டை காலி செய்ய வேண்டும் அல்லது யாகங்களை நடத்த வேண்டும். இது அமானுஷ்ய இருப்பை நீக்கும்.

இந்தியாவில் உள்ள பயத்தை உண்டாக்கும் சில ஆவி நடமாடும் இடங்கள்!!!
சரி, ஒரு வீட்டில் பேய் உலாவும் உணர்வு எப்படி ஏற்படுகிறது? உண்மையில், உங்கள் வீட்டில் பேய் உலாவுகிறது என்றால் நீங்கள் பேய் பூதத்தை பார்க்க முடியும் என்பதில்லை. அது ஒரு வகையான அமானுஷ்ய உணர்வாகும். சீராக அல்லாத சில நிகழ்வுகள் மூலமாக அதை நீங்கள் உணரலாம். அத்தகைய செயல்களுக்கு உங்களால் பகுத்தறிவு சார்ந்த விளக்கங்களை அளிக்க முடியாது. ஆனால் அப்படி நடந்தால் நீங்கள் பயப்பட போவது உறுதி. சரி, வீட்டில் பேய் இருப்பதை எப்படி உணர முடியும் என்பதைப் பார்க்கலாமா?

விந்தையான சப்தங்கள்
வீட்டில் பேய் உலாவும் உணர்வைப் பெற இதுவும் ஒரு காரணமாக உள்ளது. சில நேரங்களில் உங்களுக்கு படிக்கட்டில் காலடி ஓசை கேட்கும், அல்லது கூரையில் உருட்டொலி கேட்கும். மெல்லப் பேசுதல் அல்லது முணுமுணுப்பு சத்தங்களையும் நீங்கள் கேட்கலாம். உங்களுக்கு இவ்வகையான அனுபவம் ஏதேனும் இருந்தால், வேறு எங்காவது இருப்பிடத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

அசாதாரண விலங்கின் குணம்
அமானுஷ்ய உலகம் என்றால் விலங்குகளுக்கு அதிக உணர்வு இருக்கும் என கூறப்படுகிறது. மனிதர்களால் பார்க்க முடியாத பேய் பூதங்களை விலங்குகள் பார்த்து உணரும். உங்கள் செல்லப்பிராணிகள் (பூனை, நாய்கள், போன்றவைகள்) உங்கள் வீட்டின் சில பகுதிகளில் சில குறிப்பிட்ட நேரத்தில் அசாதாரண நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நீங்கள் கண்டால், அங்கே ஏதோ அமானுஷ்யம் உலவலாம்.

வழக்கத்திற்கு மாறான மின்னணு சாதனங்களின் கோளாறு
ஒரு வீட்டில் பேய் உலாவும் உணர்வு எப்படி ஏற்படும்? உங்கள் வீட்டில் விளக்கோ அல்லது மின்விசிறியோ தானாக ஓடுகிறதா? உங்கள் தொலைக்காட்சியில் சேனல்கள் எல்லாம் தானாக மாறுகிறதா? அணைந்திருக்கும் வானொலியில் இருந்து வழக்கத்திற்கு மாறான சத்தம் கேட்கிறதா? அப்படியானால் உங்கள் வீட்டில் அமானுஷ்யம் நிறைந்துள்ளது.

வழக்கத்திற்கு மாறான வாசனை
உங்களைச் சுற்றி பேய் உலாத்துவதற்கு மிக முக்கிய அறிகுறியாகும் இது என அமானுஷ்ய ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். வழக்கத்திற்கு மாறான வாசனை திரவியத்தின் வாசனை அல்லது உணவுகளின் வாசனை அல்லது எங்கிருந்து வருகிறது என தெரியாமலேயே வரும் புகை போன்றவற்றை நீங்கள் உணரலாம். அதற்கு காரணம் அமானுஷ்யத்தின் இருப்பு.

பொருட்கள் இடமாறும்
நீங்கள் தேடும் பொருள் மர்மமான முறையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதா? இது மிகவும் பொதுவான நூதனக் காட்சியாகும். இது ஏவலின் செயல் என வல்லுனர்கள் கூறுகிறார்கள். இரைச்சல்மிக்க இந்த பேய்கள் பாத்திரங்களைத் தூக்கி எறியும், கண்ணாடிகளை உடைக்கும் அல்லது பல்வேறு தொந்தரவுகளை அளிக்கும்.

விந்தையான அமானுஷ்யம்
உங்கள் வீட்டில் பேய் நடமாட்டம் இருப்பதற்கான முழுமையான அடையாளம் இது. காற்றில் மனித முத்திரையை உருவாக்கும் விந்தையான நிழல்கள் அல்லது மங்கும் வெளிச்சத்தை நீங்கள் காணலாம். நீங்கள் அதனை புகைப்படம் எடுக்க முயற்சித்தால், அதில் எதுவுமே விழாது. ஒரு வீட்டில் பேய் உலாவும் உணர்வு எப்படி ஏற்படுகிறது என்பது இப்போது புரிகிறதா?

விளக்க முடியாத உணர்வுகள்
உங்களை யாரோ எப்போதும் கவனித்துக் கொண்டே இருப்பதை போன்ற உணர்வு ஏற்படுகிறதா? அல்லது உங்கள் கனவில் திரும்ப திரும்ப பேய்கள் உங்களுக்கு தொந்தரவு அளிக்கிறதா? அடிக்கடி பேய் கனவுகள் வந்தாலோ அல்லது வழக்கத்திற்கு மாறான அறிகுறிகள் தென்பட்டாலோ, உங்களை ஏதோ அமானுஷ்யம் அணுக முயற்சி செய்கிறது.

குறிப்பு சரி,
ஒரு வீட்டில் பேய் உலாவும் உணர்வு ஏன் ஏற்படுகிறது? மேலே கூறிய சில விஷயங்கள் தான் உங்கள் வீட்டில் அமானுஷ்ய சூழலை உருவாக்கிறது. இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது என பலரும் கூறியுள்ளனர். ஆனால் சிலர் இத்தகைய அமானுஷ்ய நடவடிக்கைகளை நம்புவதில்லை. அதனால், உங்களுக்கு இவ்வகையிலான அனுபவங்கள் ஏதேனும் ஏற்பட்டால், அந்த வீட்டில் மேலும் இடர்பாட்டை எடுக்காதீர்கள்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad