அதிர்ச்சி : மனித இனத்தின் முன்னோர்கள் நரமாமிச உண்ணிகள்..!!?

நியண்டர்தால் இனம் (Neanderthal) ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் வாழ்ந்த ஒரு ஹோமோ வகை இனமாகும்..! முன்-நியாண்டர்தால் குணங்கள் 3,50,000 ஆண்டுகளுக்கு முன்னரே ஐரோப்பாவில் காணப்பட்டது என்பதும், முழுமையான நியண்டர்தால் குணங்கள் 1,30,000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. சுமார் 24000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் இவ்வினம் அழிந்துபோனது..!

கோயேட் குகை

பெல்ஜியத்தின் கோயேட் குகைகளை தோண்டும்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு அதிர்ச்சி கண்டறிய நேர்ந்தது. அதாவது அங்கு நியாண்டர்தால் இன மனிதர்களின் எலும்புகள் கிடைக்கப் பெற்றன.!

கிடைக்கப்பெற்ற எலும்புகளில் வடக்கு ஐரோப்ப நியண்டர்தால் மனிதன் நரமாமிசம் உண்ணும் பண்பு கொண்டிருப்பதற்க்கான முதல் ஆதாரம் கிடைத்துள்ளது.


ரேடியோகார்பனின் ஆய்வின்கீழ் இந்த எலும்புகள் சுமார் 40,500 - 45,500 ஆண்டுகள் பழமையானது என்றும், நியாண்டர்தால் மனிதஇனம் தங்களின் சக மனித எலும்புகளை ஆதிகால கருவிகளாக பயன்படுத்தியுள்ளனர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட எலும்பு துண்டுகளில் வெட்டுக்கள் மற்றும் பிளவுகள் போன்ற அடையாளங்கள் இருப்பதால் அந்த உடல்கள் மனித கைகளால் சிதைக்கப்பட்டு இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்

இந்த அறிகுறிகள் மூலம் நியாண்டர்தால் இனம் நரமாமிசம் உண்ணும் பழக்கம் கொண்டவர்களாய் இருந்திருக்கலாம் என்று மனித பரிணாமம் மற்றும் கடந்த கால புவியியல் சூழல் ஆய்வு மையம் கருத்து தெரிவித்துள்ளது.

கிடைக்கப்பெற்ற நியாண்டர்தால் எலும்புகளுடன் குதிரைகள் மற்றும் கலைமான்களின் எலும்புகளும் கிடைத்துள்ளதால் இக்கொலைகள் ஒருவித சடங்காக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது

இந்த கண்டுபிடிப்பு மூலம் தவறவிட்ட ஆதிகால மனிதர்களின் மரபணுக்கள் சார்ந்த ஆய்விற்கு பெரிய உதவியாக இருக்கும் என்பதும், அவர்கள் விட்டுச்சென்ற டிஎன்ஏ-க்களின் அடிச்சுவடுகள் இன்று வாழும் பல மக்களின் உடலில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad