13 ஆம் எண், 8 ஆம் எண் கெட்ட சகுனமா?... தெரிஞ்சிக்கோங்க மக்களே!...

மூடநம்பிக்கைகள் பலவிதம் உண்டு; அதில் ஒன்று இவ்வகை எண் மூடநம்பிக்கை, தன்னம்பிக்கை இல்லாத இடத்தில் மூடநம்பிக்கை நிறைந்து இருக்கும். சிலர் தன்பெயரில் கூட ஓர் எழுத்தைக் கூட்டியோ அல்லது குறைத்தோ மாற்றியமைப்பதுண்டு.

கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று அவர்கள் நம்புவது உண்மையானால், இந்த 13ஆம் எண்ணைப் படைத்தவரும் கடவுள் தானே?.

இன்னும் சில பேருக்கு எட்டாம் எண்ணும் பிடிக்காது; ஏன் வாகனப் பதிவில் பெருவாரியாக இது பின்பற்ற படுகிறது. கூட்டினால் 9 வருகின்ற எண்ணை வாங்க தனிக்கட்டணம்.

எந்த எண்ணாக இருந்தாலும் சரியாக ஓட்டவில்லை என்றால் விபத்து தானே நடக்கும், உயிரிழப்பு வரும்.

விஞ்ஞான மனப்பான்மையை மக்கள் மத்தியில் வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது (51A).

நாட்டு மக்களுக்கு உணவைவிட உண்மையில் முக்கியமாகத் தேவைப்படுவது பகுத்தறிவே. அது சரியாக இருந்தால்தான் மற்றவைகளும் சரியாக இருக்கும்.
Tags

Top Post Ad

Below Post Ad