இளம் தம்பதிகள் குழந்தைப்பேற்றை தாமதப்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகள்

இன்­றைய இளம் தலை­மு­றை­யினர் தங்­களின் இலட்­சி­யத்தை தொட்­ட­பின்தான் திரு­மணம் செய்து கொள்­ளலாம் என்ற எண்­ணத்­திற்கு வரு­கின்­றனர். நிறைய கன­வு­க­ளுடன் திரு­மண பந்­தத்­திற்குள் நுழை­கின்­றனர்.

அவர்­களின் வாழ்க்கை பற்­றுக்­கோட்­டிற்­காக வாரிசு ஒன்றை ஈன்­றெ­டுக்­கவும் விரும்­பு­கின்­றனர். அதற்­காக ஓராண்டு வரை காத்­தி­ருக்­கவும் செய்­கின்­றனர்.

ஓராண்­டிற்கு பின்­னரும் அவர்­க­ளுக்கு குழந்தைப் பாக்­கியம் கிட்­ட­வில்லை என்றால், தங்­க­ளு­டைய இலட்­சி­யத்­திற்­காக ஆரோக்­கி­ய­மான மழலைச் செல்­வத்தைப் பெற்­றெ­டுப்­ப­தற்­கான இள­மையை தொலைத்து விட்டோம் என்ற உண்­மையை அப்­போது தான் மெல்ல மெல்ல உணரத் தொடங்­கு­கின்­றனர்.

இவர்­களின் இந்த நிலைக்கு மாற்று இல்­லையா? என தேடும் போது தான், நவீன மருத்­துவம் அரவணைத்துக் கொள்­கி­றது.

அத்­துடன், இவர்­களின் விருப்­பத்­தையும் நிறை­வேற்றி வைக்­கி­றது. இப்­படி குழந்­தை­யில்லா தம்­ப­தி­களின் ஏக்­க­க் க­னவை நிறைவேற்­று­வதில் அனு­பவம் வாய்ந்த தமிழகத்தைச் சேர்ந்த பிர­பல டாக்டர் மகா­லஷ்மி சர­வணன்  மகப்­பே­றின்­மைக்­கான பிரச்­சி­னைகள் குறித்து விளக்கு கிறார்.

“நம் சமூ­கத்தில், முன்­னொரு காலத்தில், ஒரு குடும்­பத்தில் பத்துக் குழந்­தைகள் சர்வ சாதா­ர­ண­மாக விளை­யா­டிக்­கொண்­டி­ருந்­தன. ஆனால், இன்றோ ஒரு குழந்­தையைப் பெற்றுக் கொள்­வதே மிகச் சிர­ம­மாக இருக்­கி­றது.

இதற்குக் காரணம் தற்­போ­தைய உணவும், வாழ்க்கை முறை­யும் தான் என்­பதைப் பலரும் அறிந்­தி­ருப்­பீர்கள்.

“ஒரு பெண்ணின் வயிற்­றுக்குள் ஒரு உயிரைத் தோன்றச் செய்­வது ஒன்றும் அவ்­வ­ளவு இல­கு­வான விட­ய­மல்ல. அவ­ரது குறை­பாட்­டுக்கு யாரிடம், (அதா­வது கண­வ­னி­டமா, மனை­வி­யி­டமா) எங்கே பிரச்­சினை இருக்­கி­றது என்­பதைக் கண்­ட­றி­வது மட்­டு­மல்­லாமல், அவர்­க­ளுடன் நீண்ட நேரத்தை நாம் செல­விட வேண்டும். அப்­படி செல­விட்­டால் தான் அவர்­க­ளது குறை­களை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய முடியும்.

“குழந்­தை­யின்மை என்­பது ஆண் - பெண் இரு­பா­லா­ருக்கும் பொது­வா­னதே. ஆண் - பெண் இரு­வ­ருமே இதற்குக் கார­ண­மாக இருக்­கலாம்.

நாம் நாக­ரி­கத்தின் உச்­சியை எட்­டி­விட்டோம் என்று சொன்­னால்­ கூட, பெண் மருத்­து­வர்­க­ளிடம் ஆண்­களும் ஆண் மருத்­து­வர்­க­ளிடம் பெண்­களும் தத்­த­மது குறை­களைச் சொல்ல மிகுந்த தயக்கம் காட்­டு­கி­றார்கள்.

ஆனால், எமது மருத்­து­வ­ம­னையில் நானும் என் கண­வரும் மருத்­து­வர்­க­ளாக இருப்­பதால் இந்தச் சிக்கல் இல்லை.

“முதலில் இரு­ பா­லா­ருக்கும் மகப்­பேற்றுக் குறை­பா­டுகள் இருக்­கின்­ற­னவா என் கண்­ட­றிய முழு­மை­யான உடற்­ப­ரி­சோ­த­னை­களைச் செய்­கிறோம். அவர்­க­ளிடம் இருக்கும் குறை­பா­டுகள் அடிப்­ப­டையில், ஐயுஐ, ஐவிஎஃப் அல்­லது இக்ஸி போன்ற சிகிச்­சை­களை வழங்­கு­கிறோம்.

“சில வேளை­களில் இரு­வ­ருக்கும் தாம்­பத்­திய உறவில் தான் பிரச்­சினை இருக்கும்.

இதைக் கண்­ட­றிய முடிந்தால் ‘செக்­ஸோ­டஜிஸ்ட்’ மூல­மாக அவர்
க­ளுக்­கான ஆலோ­ச­னை­களை வழங்­கு­கிறோம்.

உடற்­ப­ருமன் போன்­ற­வற்றால் மகப்­பேற்றுத் தடை ஏற்­பட்டால், உணவுக் கட்­டுப்­பாட்­டாளர் மற்றும் உடற்­ப­யிற்­சி­யாளர் மூல­மாக அவர்­களை மகப்­பேற்­றுக்குத் தயார் செய்­கிறோம். இதனால் அவர்கள் இயற்­கையான முறை­யி­லேயே குழந்­தையைப் பெற்­றெ­டுக்க முடி­கி­றது.

“இப்­ப­டி­யாக, இங்கு வரு­ப­வர்­க­ளிடம் என்ன குறை இருக்­கி­றது என்­பதைக் கண்­ட­றிந்து அதி­லேயே எம் கவ­னத்தைச் செலுத்தி சிகிச்­சை­களை வழங்­கு­வ­தால் தான், கடந்த பதி­னாறு ஆண்­டு­க­ளுக்குள் சுமார் 25, 000 தம்­ப­தி­யர்­க­ளுக்கு வெற்­றி­க­ர­மான சிகிச்சை செய்து குழந்­தைப்­பேற்றை கொடுக்க எம்மால் முடிந்­தி­ருக்­கி­றது.”

“நீர்க் ­கட்­டிகள் எனப்­படும் ‘பொலி­சிஸ்டிக் ஓவரி’ என்ற பிரச்­சி­னைக்குப் பல பெண்­களும் ஆளா­கி­றார்கள். இதற்கு லேப்ரோஸ்­கோப்பி மூலம் சிகிச்சை அளிப்­பது வழக்­க­மாக இருந்து வரு­கி­றது.

ஆனால், நவீன ஆய்­வு­க­ளின்­படி, லேப்ரோஸ்­கோப்பி மூலம் இந்தப் பிரச்­சி­னையை அணு­கினால், கருத்­த­ரிக்கும் வாய்ப்பு குறை­வ­துடன், பக்க விளை­வு­க­ளாக, கருக்­குழாய், கரு­முட்டைப் பை என்­பன பாதிப்படைகின்றமை உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளது.

எனவே, இந்தப் பிரச்­சி­னைக்கு மருந்­துகள் மூலம் தீர்­வ­ளிப்­ப­துடன் குழ
ந்­தையும் பெற்றுக் கொள்ள முடியும்' என்றார்.

“மூன்று முறை ஐவிஎஃப் சிகிச்­சைகள் செய்தும் ‘இம்ப்­ளாண்­டேஷன் ஃபெய்­லியர்’ எனப்­படும், கருச்­சினை கருப்­பைக்குள் தங்­கி­நிற்­காத பிரச்­சி­னைக்கு, ERA (Endometrial Receptivity Array) என்ற பரி­சோ­த­னையைச் செய்­கிறோம்.

இதன்­போது, கருத்­த­ரிப்­புக்குச் செய்­வது போலவே நோயா­ளியின் கர்ப்­பப்­பையை மருந்­துகள் மூலம் தயார்­செய்வோம்.

கருச்­சி­னையை வைக்க வேண்­டிய நாளில் அதை வைக்­காமல், அதற்குத் தயா­ராக இருக்கும் கருப்பைச் சுவற்றின் திசுவின் ஒரு சிறு பகு­தியை எடுத்து அதன் செல்கள் மற்றும் மர­ப­ணுக்கள், கருச்
சி­னையைத் தாங்கிப் பிடிப்­பதில் என்ன பிரச்­சினை என்­பதைப் பரி­சோ­திப்போம்.

மேலும், கருச்­சி­னையை உள்­வாங்கும் கருப்பை வாசல்கள் சரி­வரத் திறந்­தி­ருக்­கின்­ற­னவா என்­ப­தையும் பரி­சோ­திப்போம். இதன்­மூலம், கருப்பை வாசல் திறந்­தி­ருக்கும் நேரத்தைத் துல்­லி­ய­மாக அறிய முடி­வதால், அடுத்த அமர்வில் கருச்­சி­னையைப் பொருத்­த­மான நேரத்தில் கருப்­பையில் செலுத்­துவோம்.

இதனால் கருச்­சினை தங்கி வளர்ந்து, குழந்­தை­யாக வெளி­வரும்” “ஐவி­எஃப்பின் வெற்­றி­வாய்ப்பைத் தீர்­மா­னிப்­பது மருத்­துவர் மட்­டுமோ அல்­லது தம்­ப­தி­யினர் மட்­டுமோ அல்ல.

அதற்கு முக்­கி­ய­மான நான்கு கார­ணிகள் உண்டு. ஆண் உயி­ர­ணுக்கள், பெண்ணின் கரு­முட்டை, இவை­யி­ரண்டும் இணைந்து உரு­வாகும் கருச்­சினை, இதைத் தக்­க­வைத்­துக்­கொள்ளும் கருப்­பையின் உட்­சுவர் என்­ப­வையே இந்த நான்கு கார­ணி­களும்.

இவை­ய­னைத்­தையும் மகப்­பேற்றை நோக்கி வழி­ந­டத்­து­வதே டாக்­டர்
க­ளா­கிய எமது பணி. எமது அறி­வு­ரையை முழு­மை­யா­கவும் முழு­வி­ருப்­பு­டனும் பின்­பற்றும் தம்­ப­தி­யி­ன­ருக்கு மட்­டுமே மகப்­பேற்­றுக்­கான வாய்ப்­புகள் அதி­க­ரிக்­கின்­றன.

இளம் தம்­ப­தி­யினர் குழந்­தைப்­பேற்றை தாம­தப்­ப­டுத்­து­வதால் பின்­னாளில் செயற்­கை­முறை கருத்­த­ரிப்பு, டெஸ்­டி­யூப்­பேபி போன்ற பல்­வேறு அதி­ந­வீன சிகிச்சை முறை­களை குழந்­தைப் ­பேற்­றிக்­காக மேற்­கொள்­ள­வேண்­டிய நிலை ஏற்படலாம்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad