காருக்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட கணவன் மனைவி.

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும், பெண்ணொருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இருவரும் கார் ஒன்றின் உள்ளேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொல்லப்பட்டவர்களில் ஒருவர் சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளார். புத்திக மல்லவராச்சி கொழும்பு உயர்நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக செயற்பட்டு வருகிறார்.

ரி56 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

யாரால், எந்தக் காரணத்திற்காக இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சட்டத்தரணி கரன்தெனிய சுத்த என்ற குற்றவாளியின் நீதமன்ற வழக்குகளில் முன்னிலையானவர் என்பதும்
பிக் பட்டி என்ற குற்றவாளிக்கு தனது வாடிக்கையாளரின் தகவலை வழங்கியதற்காக கரந்தெனிய சுத்தாவே கொலை செய்ததாக பாதுகாப்புத் துறை சந்தேகிக்கிறது.

பிடிகலாவைச் சேர்ந்த மல்வாரச்சி என்ற சட்டத்தரணியும் அவரது மனைவியுமே கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது…
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad