17 வயது மாணவியின் ஆபாசப்படம் வாட்ஸ் அப்பில் ; மாணவி எடுத்த முடிவு

வாட்ஸ் அப்பில் ஆபாச படத்தினை வெளியிட்ட காரணத்தினால் பொலிஸ் அதிகாரி ஒருவரின்  மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளமை இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் அருகே உள்ள பாக்பத்  ஊரை சேர்ந்த 17 வயது இளம் பெண்ணின்  தந்தை காசியாபாத்தில் பொலிஸ் அதிகாரியாகவுள்ளார்.

குறித்த இளம் பெண்ணும், ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. காலப்போக்கில் அவர்கள் இருவரும் மிகவும் நெருங்கி பழகியுள்ளனர். இடையில் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையினால் இருவரும் பிரிந்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த இளம்  வயது மாணவியும், குறித்த இளைஞனும் ஒன்றாக இருந்த போது எடுக்கப்பட்ட ஆபாச படத்தை மாணவிக்கு இளைஞன் வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார்.

இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி வீட்டை விட்டு வெளியேறி வர்த்தக நிலையம் ஒன்றின் மாடியில் இருந்து கீழே குதித்து  உடல் சிதறி சம்பவயிடத்திலேயே உயிர் இழந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மாணவியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாட்டில், "எனது மகளுடன் சம்பந்தப்பட்ட இளைஞன் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். அடிக்கடி வட்ஸ்-அப்பில் ஆபாச தகவல்களை அனுப்பினார். அவளுக்கு மட்டுமல்ல, எனது கைபேசி மற்றும் எனது மகனின் கைபேசிக்கும் இது போன்ற ஆபாச தகவல்கள் வந்தது.

இந்த நிலையில் எனது மகளின் ஆபாச படத்தை வட்ஸ் அப்பில் அனுப்பியதால் எனது மகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள்" என முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

தற்கொலை செய்த மாணவி தனது பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில், "நான் ஒரு போதும் உங்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்று விரும்பியதில்லை. அந்த இளைஞனிடம் பேசியதன் மூலம் நான் தவறு செய்து விட்டேன். எனது தவறு ஒருபோதும் நிவர்த்தி செய்ய முடியாத ஒன்று. எல்லா நாடகமும் என்னால் தான் தொடங்கியது. எனது சாவு மூலம் இந்த நாடகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன் என்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Tags

Top Post Ad

Below Post Ad

உங்கள் பிரதேச செய்திகளை +94 751651409 என்ற இலக்கத்திற்கு வாட்ஸாப் செய்யுங்கள். செய்திகளை உடனுக்குடன் பெற எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்யுங்கள்.