குறைவாக தூங்கினால் உயிருக்கு ஆபத்து

ஒரு ம‌னித‌ன் தினமும் குறை‌ந்தது 6 மணி நேரம் தூங்க வேண்டும்.

அதற்கு குறைவாக தூங்கினால் அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று மரு‌த்துவ‌ர்க‌ள் தெரிவித்து உள்ளனர்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள வார்விக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தூக்கம் குறித்து ஆராய்ச்சி செ‌ய்தன‌‌ர்.

இ‌ந்த ஆரா‌ய்‌ச்‌சி‌யி‌ன் முடி‌வி‌ல், தூக்கமின்மைக்கும் அகால மரணத்துக்கும் தொடர்பு இருக்கிறது. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் பெரும்பாலான மக்கள் 5 மணி நேரத்துக்கும் குறைவாக தான் தூங்குகிறார்கள். 6 மணி நேரத்துக்கு குறைவாக தூங்குபவர்களில் 12 சதவீதம் பேர் அகால மரணம் அடைகிறார்கள். அதே போல 9 மணி நேரத்துக்கு மேல் தூங்கினாலும் அவர்களுக்கு மரணம் முன்னதாக ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

குறைவாக தூங்குபவர்களுக்கு சர்க்கரை வியாதி, உடல்பருமன் நோய், ரத்த அழுத்தம், உடலில் கொழுப்பு சத்து சேர்வது போன்ற நோய்கள் ஏற்படும். இதுபோ‌ன்ற நோ‌ய்க‌ள் ஏ‌ற்படுவத‌ற்கான அ‌றிகு‌றியாக‌க் கூட குறைவான தூ‌க்க‌த்தை‌ எடு‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம் எ‌ன்‌கிறது ஆ‌ய்வு.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.