அதுக்கு மறுத்து மனைவி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கணவருக்கு சிறை!

இங்கிலாந்தில் பெண் ஒருவர் தனது கணவருடன் உடலுறுவு கொள்ள மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் அந்த பெண் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார். இதனையடுத்து அவருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்டிஃபைன் லிட்டில்உட், இவரது கணவர் வெயின் ஹோபன். ஹோபன் உடலுறவு வைத்துக்கொள்ள ஸ்டிஃபைன் லிட்டிலுட்டை அழைத்த போது அவர் தனக்கு விருப்பம் இல்லை என கூறியுள்ளார். உடனே ஹோபன் மனைவியின் மீது ஏறி அமர்ந்து அவரது முகத்தில் சரமாரியாக குத்தியுள்ளார்.

சுமார் 40 முறைக்கு மேல் குத்தியதில் தாடை மற்றும் பற்கள் உடைந்த நிலையில் அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தான் தாக்கப்பட்ட அந்த புகைப்படத்தை அந்த பெண் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அவரது கணவருக்கு 16 மாதங்கள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad