பரபரப்பான ரோட்டில் சிறுவன் ஏற்படுத்திய அதிர்ச்சி!!

சீன நாட்டின் ஸேஜியாங் பிரதேசத்தில் உள்ள பரபரப்பான போக்குவரத்து மிகுந்த சாலையின் நடுவே சிறுவன் ஒருவன் தன்னுடைய பொம்மை காரை ஓட்டிக்கொண்டு எதிர்புறமாகச் சென்றான்.
சாலையில் வரும் வாகனங்கள் அவரை மோதுவதுபோல் வந்து ஒதுங்கி செல்வதை கவனித்த சீன போலீசார் ஒருவர் உடனே சென்று அந்த சிறுவனை மீட்டார். இந்த பரபரப்பான அதிர்ச்சி சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமாரவில் பதிந்ததை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இனிமேலாவது, குழந்தைகளை பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க சீனா தற்போது இந்த வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.