12 வயது சிறுமிகள் 12 பேர் கர்ப்பம்!... வெறிநாய்களாக மாறிய ஆசிரியர்கள்.

இந்த கொடுமை நடைபெற்ற மராட்டிய மாநிலத்தில் தான். தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. புல்தானா மாவட்டத்தில் உள்ளது நிதாதி ஆசிரமம். பழங்குடியின சிறுமிகளை மேம்படுத்துகிறோம் என கூறி அங்கு படித்து வந்த சிறுமிகளை வேட்டையாடி இருக்கிறது ஆசிரம ஆசிரியர் கும்பல்.

தீபாவளி விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த சிறுமிகளிடம் மாற்றங்கள் இருந்ததை கண்ட பெற்றோர் அவர்களை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றபோது அவர்கள் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதுவரை 12 சிறுமிகள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. சிறுமிகள் அனைவருக்கும் 12 வயது முதல் 14 வயது வரை தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த வழக்கில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட 11 ஆசிரியர்களை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர். மேலும் சில ஆசிரியர்கள் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.