ஸ்லிம்மா இருக்கணுமா? இதோ சூப்பர் டயட் உணவுகள்...

டயட்டின் போது எந்த வகையான உணவுகளை சாப்பிடுவது, எந்த உணவுகளை தவிர்ப்பது என்று இன்னும் சிலருக்கு தெரிவதில்லை. எனவே நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் மூலம் உடல் எடையை குறைப்பதுடன், நமது உடம்பிற்கு தேவையான சத்துக்கள் கிடைக்குமாறு உணவுகளை சாப்பிட வேண்டும்.
டயட்டின் போது சாப்பிட வேண்டிய உணவுகள்
பரங்கிக்காய்
பரங்கிக்காயில் பீட்டா-கரோட்டீன்கள் மற்றும் குறைவான அளவு கலோரிகள் உள்ளது. எனவே இந்த பரங்கிக்காயை டயட்டின் போது சேர்த்துக் கொள்வதால், மெட்டபாலிச பிரச்சனைகளை தீர்த்து, உடல் எடையைக் குறைக்கிறது.
ஆப்பிள்
ஆப்பிளில் உள்ள பெக்டின் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நமது உடம்பில் செரிமானப் பிரச்சனைகளை நீக்கி, சர்க்கரை உணவுகளின் மீதுள்ள ஆர்வத்தைக் குறைக்கிறது.
மேலும் இது குடலில் உள்ள ஆரோக்கியமான பாக்டீயாக்களுக்கு உறுதுணையாக இருப்பதோடு, உடல் எடை குறைவதற்கும் உதவியாக இருக்கிறது.
பட்டை
டயட்டில் இருக்கும் போது, நாம் சாப்பிடும் பழ ஜூஸ்கள் மற்றும் காய்கறி சாலட் ஆகியவற்றில் சிறிது பட்டை தூளை சேர்த்து சாப்பிட வேண்டும்.
ஏனெனில் பட்டையில் உள்ள பாலிஃபீனால்கள் நமது உடம்பில் உள்ள ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் வைத்துக் கொள்ளும்.
காலிஃப்ளவர்
காலிஃப்ளவரில் நார்ச்சத்து, கலோரிகள், விட்டமின் C போன்ற சத்துக்கள் உள்ளது. எனவே இந்த காய்கறியை நாம் டயட் இருக்கும் போது சாப்பிட்டால், விரைவில் உடல் எடை குறைவதைக் காணலாம்.
ப்ராக்கோலி
ப்ராக்கோலியில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் கால்சியம் சத்தும் உள்ளது. எனவே இந்த ப்ராக்கோலியை நமது டயட்டின் போது சாப்பிட்டால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
பசலைக்கீரை
பசலைக் கீரையில் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், விட்டமின் K, C, பீட்டா-கரோட்டீன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
எனவே இந்த கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்த்து, நோயெதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும்.
ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிடுவதால், இதிலுள்ள விட்டமின் C நமது உடலின் மெட்டபாலிசத்தைத் தூண்டி, கொழுப்புச் செல்களைக் கரைத்து, வேகமாக உடல் எடையை குறைக்கிறது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad