வெள்ளை மாளிகையை மிஞ்சும் ஒபாமாவின் மாளிகை: வெளியானது புகைப்படம்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தமது பதவி காலம் முடிவடைந்த பின்னர் குடியேறவிருக்கும் புதிய வீட்டின் புகைப்படங்கள் வெளியாகி தற்போது வைரலாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக் காலம் முடிவுக்கு வருவதை அடுத்து அவர் குடியேறுவதற்கு என்று புதிய வீடு ஒன்றை அமெரிக்க அரசு ஒதுக்கியுள்ளது. இந்த புது வீட்டின் புகைப்படங்கள் அனைத்தும் பார்ப்பவர்களை மிரள வைக்கும்படியாக உள்ளதாய் கூறுகின்றனர்.

அடுத்த ஆண்டு ஜனவரியில் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதும் ஒபாமா குடும்பம் இந்த புதிய இல்லத்தில் குடியேற இருப்பதாக கூறப்படுகிறது.

வெள்ளை மாளிகையில் இருந்து மிக அருகாமையில் அமைந்துள்ள இந்த இல்லமானது 8,000 சதுர அடி பரப்பளவை கொண்டதாகும்.

இந்த புதிய இல்லத்தின் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் அனைத்தும் வெள்ளை மாளிகையில் உள்ளது போலவே வடிவமைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த புதிய இல்லத்தில் அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய 9 படுக்கை அறைகளும், 8 குளியல் அறைகளும், ஒரு உயர் ரக சமையல் அறையும், விருந்தினர் அறை ஒன்றும், விஸ்தாரமான முற்றமும் கொண்டுள்ளது.

ஒபாமாவின் இளைய மகள் சாஷா மேல்நிலை படிப்பை முடிக்கும் மட்டும் தலைநகரில் குடியிருக்கவே அவர் விரும்புகின்றாராம்.