நிலவை சுற்றி வந்த பறக்கும் தட்டு...! அதிர்ச்சி வீடியோ.

2016ஆம் ஆண்டு தொடக்கம் முதலே பூமியில் வேற்று கிரகவாசிகள் பற்றி அனைத்து இடங்களிலும் பேசி வருகின்றனர். அண்மையில் ஆகாயத்தில் இருந்து வித்தியாசமான பொருட்கள் விழுந்ததாக செய்திகள் வெளியானது.

அதைத்தொடர்ந்து கடந்த 14ஆம் தேதி நிலவு பூமிக்கு மிக அருகில் வந்தது. இதை சூப்பர் மூன் தினம் என்று குறிப்பிட்டனர். அன்று பறக்கும் தட்டு ஒன்று புகைப்படத்தில் சிக்கியுள்ளது.

இது வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டு என்று ஒரு சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தக் காணொளி தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அவ்வப்போது வேற்று கிரகவாசிகள் குறித்து வெளிவரும் தகவல் குறித்து ஆய்வாளர்கள் கூற மறுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.