17 வயது பெண் கத்தியை காட்டி 19 வயதான இளைஞனை பாலியல் பலாத்காரம்.

அமெரிக்காவில் 19 வயதான இளைஞனை கத்திமுனையில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 17 வயதான யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மிச்சிகன் மாநிலத்தின் சஜினேவ் நகரில் இந்தப் பாலியல் வல்லுறவுச் சம்பவம் இடம்பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெஸ்டினா மேரி ஸ்மித் எனும் 17 வயதான யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இவர், 19 வயதான இளைஞர் ஒருவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட வைத்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட லெஸ்டினா மேரி ஸ்மித், சஜினேவ் கவுன்ரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  எதிர்வரும் 3 ஆம் திகதி அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.