2016ல் மட்டும் 150 பேரின் தலையை வெட்டி மரண தண்டனை கொடுத்த சவுதி அரேபியா

நாம் அடிக்கடி ஐ.எஸ் தீவிரவாதிகள் தண்டனை தொடர்பாக விவாதிப்பது உண்டு. அவர்கள் பலருக்கு மரண தண்டனை வழங்குவதும். தலையை துண்டிப்பதும் தொடர்பாக மேலைத்தேய நாடுகள் கடும் கண்டனத்தை வெளியிட்டு வருகிறது. ஆனால் சவுதி அரேபியாவில் மாத்திரம் 2016ம் ஆண்டில் சுமார் 150 பேர் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

2016ம் ஆண்டு ஐ.எஸ் தீவிரவாதிகள் 150 பேரை வெட்டிச் சாய்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் அவர்களை காட்டிலும் அதிகமான நகர்களுக்கு சவுதி சரேபியா தண்டனை வழங்கியுள்ளது. அமெரிக்கா , பிரித்தானியா போன்ற நாடுகள் இதனை கண்டுகொள்வதே இல்லை என்று மனித உரிமை செயல்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.